நடிகைகள் உடை பற்றி சர்ச்சையாக பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் பெண்கள் உடை பற்றி பேசியுள்ளது பெரிய சர்ச்சையாகியுள்ளது. சினிமா நிகழ்ச்சிகளில் வரும் ஹீரோயின்கள் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும், அப்படி உடலை காட்சி பொருளாக காட்டினாள் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறார்களோ என அவர் கூறியுள்ளார். இது சர்ச்சையாகியுள்ள நிலையில் பலரும் எஸ்பிபியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.