நடிகையர் திலகம் படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான் நடிகையர் திலகம். தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நாக் அஸ்விக் இயக்கிய இந்த படத்தில் சாவித்திரியாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளைகொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தியின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. அந்த படத்திற்காக அவருக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைக்கும் என அப்போதே பேசப்பட்டது. அதேபோல் பல விருதுகளையும் அவர் பெற்றார். இந்நிலையில், தற்போது அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 66வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசு தலைவர் கையால் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.