Cine Bits
நடிகையாகி இருக்கும் பழம்பெரும் இயக்குனரின் பேத்தி !

அன்பே வா, தெய்வமகன், பாரதவிலாஸ், பத்ரகாளி, தீர்க்க சுமங்கலி உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் 44 படங்களை டைரக்டு செய்தவர், ஏ.சி.திருலோகசந்தர். ஏ.சி.திருலோகசந்தரின் பேத்தி யாமினி, ‘வால்டர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகி ஆகியிருக்கிறார். கதாநாயகன், சிபிராஜ். யாமினி, ‘பி.பி.ஏ.’ பட்டதாரி. ‘வால்டர்’ படத்தில் இவர் திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தை அடுத்த மாதம் (மார்ச்) திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.