நடிகையுடன் செல்பி ரசிகர்கள் குவிந்ததால் பாரம் தாங்காமல் மேடை சரிந்து விபத்து !

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான பிர்பஹா சோரனை  ஆதரித்து  நடிகை  நஸ்ரத் ஜஹான் ஜார்கிராம் மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட கோபிபலாப்போர் என்ற இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நடிகையுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் மேடையில் ஏறி்யதால், பாரம் தாங்காமல் பிரசார மேடை  திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக  யாருக்கும் காயம் ஏற்படவில்லை.