Cine Bits
நடிகை ஜூலியின் காதலன் மீது புகார்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜீலி, தற்போது படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகை ஜீலி. சென்னை எழும்பூரில் போலீஸ் வாகனம் மீது அவரின் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ஜீலியுடன் காரில் இருந்த காதலன் இப்ரான் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ஜீலிக்கு ஆதரவாக 10 பேர் கொண்ட கும்பல் போலீசை தாக்கியதாகவும், வேப்பேரி காவல்நிலைய காவலர் பூபதி புகார் அளித்துள்ளார். காவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை ஜீலி காதலனுடன் நடுரோட்டில் அடிதடி வழக்கில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.