நடிகை தமன்னா ஆன்மீகத்தில் உள்ளது

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கி நேற்று முன்தினம் ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட, மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றார். அதில் அவர் “வெற்றி தோல்வி சகஜம் என்றும், வெற்றியில் பெருமைப்பட வேண்டும், தோல்வி வந்தால் பாடம் கற்க வேண்டும் என்றும், படம் தோல்வி அடைந்தால், அதற்கு நாம் பொறுப்பு ஏற்று கொண்டால் தன்னம்பிக்கையை இழந்து விடுவோம். நான் இப்பொது எல்லாம் நேர்மறை சிந்தனைகளே சிந்திக்கின்றேன். எதிர்மறை சிந்தனைகளை சிந்திப்பதில்லை என்றும், என்னை நானே காதலிக்க துவக்கியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.