நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ராதாரவி!

சமீபத்தில் திரைப்பட விழாவொன்றில் பேசிய ராதாராவி, சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட் ஆவார்கள். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயமாகும். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியிருந்தார் ராதாரவி. ராதாரவியின் மேற்கூறிய கருத்துக்கள் கடும் சர்ச்சையானது. சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானார். இந்நிலையில், நடிகை நயன்தாரா தொடர்பாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார். விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.