நடிகை பிரியங்காவுக்கு பாக்., கடும் எதிர்ப்பு!

இஸ்லாமாபாத்: 'யூனிசெப்' எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதர் பதவியிலிருந்து, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்கும்படி, பாகிஸ்தான், போர்க்கொடி தூக்கியுள்ளது. பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ரா, இவர், 2016 முதல், யூனிசெப் நல்லெண்ண துாதராக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்ததை பாராட்டி, பிரியங்கா சோப்ரா, சமூக வலைதளத்தில், 'ஜெய்ஹிந்த்; இந்திய ராணுவத்துக்கு வாழ்த்துக்கள்'என, பதிவிட்டிருந்தார்; இது, பாகிஸ்தான் தரப்புக்கு, பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.