நடிகை மந்த்ரா வீட்டில் வருமானவரி சோதனை !

தென்னிந்தியாவில் புகழ் பெற்ற கலர்ஸ் உடல் எடை குறைப்பு நிறுவனத்தின் கிளைகளில் அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் கிருஷ்ணாவின் உறவினரான நடிகை மந்திரா (தெலுங்கில் ராசி) வீட்டிலும் ரெய்டு நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டது கலர்ஸ் (Kolors ) ஹெல்த்கேர் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு ஹைதராபாத், சென்னை, கோவை என பல ஊர்களில் கிளைகள் உள்ளன. ஆந்திரா, தெலுங்கானாவிலும் நிறைய கிளைகள் உள்ளன. இந்த நிலையில் வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கிய கலர்ஸ் நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். 4 நாளாக ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. மந்திரா வீட்டிலும் ரெய்டு நடப்பதாக சொல்கிறார்கள். மொத்தம் 50 இடங்களில் ரெய்டு நடக்கிறதாம். இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பணம் சிக்கியதாக தகவல் இல்லை.