நடிகை மஹிமா நம்பியாரின் அடுத்தடுத்த படங்கள்!
‘சாட்டை’ படம் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை நடிகை மஹிமா நம்பியார். அதையடுத்து ‘குற்றம் 23’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் ‘கொடிவீரன்’. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐங்கரன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதையடுத்து ஆர்யாவுக்கு ஜோடியாக ‘மகா முனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் மஹிமா நம்பியார். இதற்கிடையே மலையாளத்தில் ‘மதுர ராஜா’ படத்திலும் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் நடிகை மஹிமா நம்பியார் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘ஐங்கரன்’ படத்தில் எனக்கு செவிலிப் பெண் பாத்திரம். அதே போல ‘மகா முனி’ படத்திலும் அற்புதமான பாத்திரம். நகரப் பின்னணியில் திரில்லர் களமாக விரியும் இந்தப் படமும் எனக்கு நடிப்பில் நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தை சாந்தகுமார் இயக்கி வருகிறார். மேலும் மலையாளத்தில் மம்முட்டி சார் நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தின் அடுத்த பாகமாக விரியும் ‘மதுர ராஜா’ படத்துக்கான இன்னும் ஒருநாள் படப்பிடிப்பும், டப்பிங் மட்டும்தான் இருக்கு. இந்தக் கதைக்கும் மதுரைக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் ’மதுர ராஜா’ என்று பெயர் வெச்சிருக்காங்க. படத்தில் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நான் நடித்திருக்கேன்’’ என்கிறார் மஹிமா நம்பியார்.