நடிகை லட்சுமிமேனனுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலை தீவிரம்!

சசி குமாரின் ‘சுந்தர பாண்டியன்' விக்ரம் பிரபுவின் ‘கும்கி',‘குட்டிப் புலி' என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன். இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தே போதே இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததால் படிப்பை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். படிப்பு பாதி நடிப்பு மீதி என இருந்து இவருக்கு தற்போது அவர் வீட்டார் மாப்பிள்ளை பார்த்துவருவதாக செய்திகள் வெளியாகிறது. இவருடைய திருமணம் குறித்த செய்தி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.