நடிகை வரலக்ஷ்மி டாஸ்மாக் கடையில் ஒரு பீர் குடிப்பது போன்று புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தனக்கு செட்டாகும் ரோல்களை மட்டும் தேர்ந்தெடுத்து  நடித்து வரும் நடிகர் சரத்குமாரின்  மகள் வரலக்ஷ்மி.  தற்போது  விக்ரம் வேதா படத்தில் அவருடைய  ரோல் பாராட்டப்பட்டது. அவர் தற்போது காதல் மன்னன் படத்தில் விமலுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் ட்விட்டரில் வரலக்ஷ்மி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுருந்தார். அந்த  புகைப்படத்தில்  விமல், வரலக்ஷ்மி இருவரும் டாஸ்மாக்  கடையில் ஒரு பீர் பாட்டிலை  வைத்து ” குடிக்கலாமா  வேண்டாமா?  முடிவெடுக்கும்  நேரம் ” என்று  இந்த புகைப்படத்தை பற்றி ட்விட்டரில் வரலக்ஷ்மி குறிப்பிட்டு  இருந்தார். இந்த காட்சி படத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.