நடிகை ஸ்ரீதேவியின் மரணம்! உண்மை என்ன? வாயை திறந்த கணவர் போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் அன்றைய லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாக மாறியவர். இந்த வருடம் பிப்ரவரி  24 ல் நிகழ்ந்த அவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியே. துபாய்க்கு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றவர் மது போதையில் ஹோட்டல் பாத்ரூமில் குளிக்கும் தொட்டியில் வழுக்கி விழுந்து இறந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இம்மரணம் குறித்த விசாரணை இன்னும் போய்க்கொண்டிருக்கையில் அண்மையில் கேரள டிஜிபி ரிஷராஜ் சிங் சமீபத்தில் ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தன்னுடைய நண்பர் தடயவியல் நிபுணர் ஒருவர் கூறியதாக பேட்டி அளித்தார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இது மாதிரியான முட்டாள் தனமான கதைகளுக்கு நான் பதில் கொடுக்க விரும்பவில்லை. இந்த கதைகள் வந்துகொண்டுதான் இருக்கும். இதன் பிறகும் நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒருவருடைய கற்பனை கதை மட்டுமே என கூறியுள்ளார்.