நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்….

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய  மொழிகளில் நடித்துள்ளார்.அவர் முன்னணி நட்சத்திரங்களான சிவாஜி கணேசன் ,ரஜினி,கமல்,விஜய்,அஜித் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் குணச்சித்திரம் மற்றும் அம்மா வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது. அவர் இருந்த வீடு வருமான வரி கட்டாததால் தற்போது அந்த வீடு வரும் 27 தேதி ஏலத்திற்கு விடப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு 1கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்று தெரிகிறது. இது குறித்து வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.