நடிகை ஹன்சிகாவின் நிலைமை தனக்கு வரவேண்டாம் – நடிகை மேகா ஆகாஷ் கவலை!

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். கவுதம் மேனன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. முதல் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் அடுத்தடுத்து நடித்த பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் படங்கள் வெளியாகி அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. மேகா ஆகாஷ் இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அன்றாட நிகழ்வுகளை பகிர்வதுடன் தனது கவர்ச்சி படங்கள், பர்சனல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸும் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிலர் ஹேக் செய்திருப்பதுடன் அதில் உள்ள படங்கள், வீடியோக்களை திருடிவிட்டனர். இதையடுத்து தனது புதிய பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை தொடங்கியிருக்கிறாராம். ஆனாலும் குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் முகவரியை பதிவு செய்தால் அது ஹாலிவுட் நடிகை முகவரிக்கு செல்கிறது. இதற்கிடையில் மேகா ரசிகர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் எனது இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சி நடக்கிறது. இந்நிலையில் என் பெயரில் வரும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் நடிகை ஹன்சிகாவின் செல்போன் மற்றும் இன்ஸ்டாகிராமை ஹேக் செய்த சிலர் அவரது அந்தரங்க படங்களை நெட்டில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.