Cine Bits
நடிப்பிற்காக பொறியியல் பட்டதாரியான ஜிப்ஸி நடிகை !

‘ஜிப்ஸி’ நாயகி நடாஷா சிங் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம். வளர்ந்து ஆளான பிறகும் ஆசை பெரிதானதே தவிர, குடும்பத்தாரின் அனுமதி மட்டும் கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தால் நடிக்கலாம் என்று வீட்டார் அனுமதி கொடுத்துள்ளனர். இந்த ஒரு காரணத்துக்காகவே கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்றேன்.
வீட்டிலும் சினிமாவில் நடிக்க மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர். ஆனால் எங்கே சென்று வாய்ப்பு கேட்க வேண்டும், யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. சினிமா வாய்ப்புக்காக காத்திருந்த போது தான் விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன.
மாடலிங் துறையில் எனக்கு பாராட்டுகள் கிடைத்தபோதிலும், எனது துறை என்பது சினிமா தான் என்பதில் தெளிவாக இருந்தேன், என்று சொல்லும் நடாஷா, கடந்த 2015ஆம் ஆண்டு ‘மிஸ் இமாச்சல பிரதேசம்’ போட்டியில் அழகிப் பட்டம் பெற்றவர். இதையடுத்து வேறு சில அழகிப் போட்டிகளிலும் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தனது மேலாளர் மூலம் ‘ஜிப்ஸி’ படத்துக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடப்பதாகக் கேள்விப்பட்டாராம். ராஜு முருகன் படம் என்றதும் ஆர்வம் ஏற்படவே, மும்பையில் நடந்த அந்தத் தேர்வில் பங்கேற்றுள்ளார்.