நடிப்புடன் பாடலும் பாடி அசத்தும் நடிகர் கருணாஸின் மகன் கென் !

பிரபல நடிகர் கருணாஸ் மகன், கென் ஏற்கனவே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, ரகளை புரம், அழகு குட்டி செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படம் முழுவதும் வருவதுபோல் கென் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் கென் நடிப்பது மட்டுமின்றி 'பொல்லாத பூமி ' என்னும் பாடலையும் பாடி அசத்தியுள்ளார். இப்படத்தில் நடித்தது பற்றி கென் கூறுகையில், எனது தந்தை கருணாஸ் எனக்குள்ள ஆர்வத்தையும் நடிப்பு திறமையையும் பார்த்து சினிமா துறைக்குள் நுழைய சம்மதித்தார். சினிமாவில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி இருக்கிறார். ‘அசுரன்’ படம் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அசுரன் படத்தில் ‘பொல்லாத பூமி’ என்ற பாடலை பாடி இருக்கிறேன் இவ்வாறு கென் கூறினார்.