நடிப்பை தொடர விரும்பும் அகத்தியன் மகள் நிரஞ்சனி !

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் மூன்றாவது மகள் நிரஞ்சனி. காஸ்டியூம் டிசைனராக இருந்தவர் கண்ணும்  கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக நடிகையாகிவிட்டார். மேற்கொண்டு படத்தில் நடிப்பீர்களா அல்லது டிசைனராகத் தொடர்வீர்களா என கேட்டபொழுது, நடிக்கும் ஆசை எனக்கு இருந்ததே இல்லை. விருப்பப்பட்டு தான் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினேன். அதே போல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்குள் டிசைனராகதான் வந்தேன் திமிராக நடிக்க ஒரு பொண்ணு வேண்டுமென்று அதுக்கு நீங்க தான் செட் ஆவீங்கன்னு என்னை நடிகை ஆக்கிவிட்டார். இப்போது நடிப்பின் மேல் ஆர்வம் வந்துவிட்டது. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் தொடந்து காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றுவேன் என்றார். சிகரம் தொடு, கற்றது களவு ,காவிய தலைவன், பென்சில், கதகளி, கபாலி உள்பட பல படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார்.