நட்பின் பெருமை சொல்லும் ஹிப்ஹாப் ஆதியின் ஆத்தாடி பாடல்!

மீசைய முறுக்கு' வெற்றிக்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம் 'நட்பே துணை' . இந்த படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார். படத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், ஷா ரா, ராஜ் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ஆத்தாடி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நட்பின் பெருமை சொல்லும் விதத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது.