நம்மவீடு பிள்ளையாக சிவகார்த்திகேயனின் பர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.