நம்ம முகத்துக்கு ஹீரோ எல்லாம் செட்டாகாதுங்க வில்லன் தான் செட் ஆகும் – துறை

ஹீரோவெல்லாம் வேணாம் வில்லனே போதும் என்று புதிய ரூட்டுக்கு திரும்பியிருக்கிறார் தப்பாட்டம் பட ஹீரோ துரை சுதாகர். ‘களவாணி 2’ படத்தில் ஏற்ற வில்லன் வேடம் அவரது மனதை மாற்றிவிட்டதாம். இதுபற்றி துரை சுதாகர் கூறும்போது,’ ஹீரோவாகவெல்லாம் நடிச்சா ஜீரோ ஆகிவிடுவேன் என்று புரிந்துகொண்டேன். களவாணி 2ம் பாகத்தில் கிராமத்து பெரிய மனிதனாக வில்லன் வேடம் ஏற்று நடித்திருக்கிறேன். நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வில்லன் என்றால் அடாவடித்தனம் செய்யும் ரோல் இல்லை. அரசியல்வாதியாக ஊர் மக்களுக்கு நல்லது செய்வேன், அதேசமயம் போட்டின்னு வந்துவிட்டால் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்ற வித்தியாசமான பாத்திரம்.  படத்தில் நடித்திருக்கும் ஹீரோ விமல், ஹீரோயின் ஓவியாவுடன் சேர்ந்து வில்லனாக நடித்த எனக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் சற்குணம்தான். அடுத்து வரலட்சுமி நடிக்கும் டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன்’ என்றார்.