நயன்தாராவின் கசப்பான கஜினி பட அனுபவம் !

தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவு உயர்ந்திருக்கிறார் நயன்தாரா. இந்த பெயரெடுக்க அவரின் கடின உழைப்பும், மனம் தளராமயுமே காரணம். அதற்கு காரணம் அவர் கதையை தேர்ந்தெடுக்கும் விதமும், படம் வெளியாகும் வரை அந்த குழுவுக்கு உறுதுணையாய் இருப்பதும்தான் தர்பார்’ படத்தில் நடித்துவிட்ட நிலையில் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கஜினி படத்தில் வரும் சித்ரா கதாபாத்திரத்தில் நடித்ததற்கு வருந்தியதாக தெரிவித்துள்ளார். கஜினி கதையை சொல்லும்போது அவர் கதாபாத்திரம் ஒரு விதமாகவும், படமாக்கப்படும்போது வேறு விதமாகவும் இருந்ததாக கூறியிருக்கிறார். கஜினி படத்தின் அசின் அளவுக்கு நயன்தாரா நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.  ‘கஜினி படம் 2008ல் ரிலீஸானது. 11 வருடங்களுக்குப் பிற்கு நயன்தாரா இவ்வாறு பேட்டி அளிக்கக் காரணம் தர்பார்’படக் கசப்பு அனுபவம்தான் என்கின்றனர் நயன்தாராவிற்கு நெருக்கமானவர்கள்.