Cine Bits
நயன்தாராவின் “கோலமாவு கோகிலா”படம்…

தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா வலுவான ரோல் இருந்தால் மட்டுமே நடிப்பார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாக உள்ளது.