நயன்தாராவுக்கு வில்லனாகும் ப்ரஜன் !

மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். லவ் ஆக்சன் டிராமாவாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக சின்னத்துரை பிரபலம் பிரஜன் நடிக்க உள்ளார். பிரஜன் ஏற்கனவே ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதேபோல் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். பிரஜனின் மனைவி சான்ட்ராவும் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.