நயன்தாராவைப் பற்றி ராதாரவி பேசியதில் தவறில்லை – இயக்குநர் பேரரசு !

சின்ன படங்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறார் ராதாரவி அண்ணன். மனதில் இருப்பதை அப்படியே பேசிவிடுவார். சினிமாவில் நடிக்கத் தெரியும், நேரில் நடிக்கத் தெரியாது. சினிமாவில் நடித்துவிட்டு, அவருக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லை. சமீபத்தில் கூட அவர் பெரிய பிரச்சினையில் சிக்கி விடுதலையாகிவிட்டார். பெரிய பரபரப்பாக இருந்தது. முதல் முறை முழுமையாக கேட்டுவிட்டு, நமக்கு ஒன்றும் தவறாக தெரியவில்லையே. நாம் சரியாக பார்க்கவில்லையோ என்று மீண்டும் பலமுறை பார்த்தேன். அவர் தப்பாகவே பேசவில்லை. நயன்தாராவைப் பற்றி உயர்வாகத் தான் பேசியுள்ளார். இப்போது எல்லாம் நடிகைகள் 3 – 4 வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகை இருக்கிறார் என்று பெருமைக்குரிய விஷயம். இது பாராட்டு தான், தரக்குறைவு அல்ல. சாமி படத்திலும் நடிக்கிறார், பேய் படத்திலும் நடிக்கிறார் என்பது சரியான ஒரு நடிகைக்கான பாராட்டு. எங்கேயோ யாரோ திரித்துவிட்டு, பிரச்சினையாக்கிவிட்டார்கள். நயன்தாராவைப் பற்றி ராதாரவி தவறாக பேசவில்லை; உயர்வாகத் தான் பேசியுள்ளார் என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். இதற்கு எல்லாம் ராதாரவி அண்ணன் பயந்துவிடக் கூடாது. மனதில் பட்டதை பேசுங்கள். அப்போது தான் சினிமாவில் கொஞ்ச பேருக்கு பயம் வரும். இல்லையென்றால் எங்களுக்கு பயம்விட்டு போகும் இவ்வாறு இயக்குநர் பேரரசு பேசினார்.