நயன்தாராவையே பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகை !

கீர்த்தி சுரேஷ் தற்போது முதலிடத்தில் உள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவிற்கு ஏராளமான இளம் நடிகைகள் வந்துள்ளனர். அதனால் நயன்தாரா தற்போது முதலிடத்தில் இருந்து விலகியுள்ளார். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு இவர் விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதனால் தற்போது நடிகைகளின் தேடலில் முதலில் இருந்த நயன்தாரா தற்போது பின்னோக்கி சென்று அந்த முதலிடத்தை கீர்த்தி சுரேஷ் தக்க வைத்துள்ளார்.