நயன்தாராவை பற்றி மனம் திறந்த மோகன் ராஜா

பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மோகன்ராஜா கூறியபோது, 'சுழ்நிலைக்கேற்ற மாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி சூழ்நிலையை மாற்று’ என்பதுதான் இந்த படத்தின் கதை என்பதை ரத்தின சுறுக்கமாக கூறியுள்ளார்.
மேலும் 'தனி ஒருவன்' படத்தை இயக்கியபோதே நயன்தாராவுக்கும் எனக்கும் மனவருத்தம் ஏற்பட்டது உண்மை என்றும் மித்ரன் மற்றும் சித்தார்த் அபிமன்யூ ஆகிய இரண்டு முக்கிய கேரக்டர்களுக்கு இடையில் ஒரு முன்னனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது என் தவறு என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அதே தவறு இந்த படத்தில் நடக்காமல் மிருளாணி என்ற கேரக்டரில் நயன்தாரா சூப்பராக நடித்துள்ளார்' என்றும் கூறியுள்ளார்.