நயன்தாரா தன் அன்பான ரசிகர்களுக்கு எழுதிய கடிதம்.

நடிகை நயன்தாரா தொடர்ந்து நம்பர் 1 ஹீரோயினாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்த அறம்  படத்தில் நடித்ததால் விமர்சனங்களும், வசூலும்,  பாராட்டும் படி இருந்தது.  ரசிகர்களின் பாராட்டுக்களும் இவருக்கு குவிந்தவண்ணம் இருந்தது. இதனால் ரசிகர்களுக்கு  புத்தாண்டு  வாழ்த்துக்களை தன் கைப்பட எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த கடிதத்தில் அவர்.

 

அன்பான ரசிகர்களுக்கு  நன்றி  மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் அன்பால் என் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாகவும்,அழகாகவும், மாற்றியுள்ளதை நான் உணர்கிறேன். உங்களால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். உங்களின் அன்பால் கடினமாக உழைத்துவிட்டு மற்றதை ஆண்டவனிடம் விட்டுவிட வேண்டும்  என்பதை புரிந்து  கொண்டேன் இதனால் பொழுதுபோக்காக படங்கள் மட்டும் இல்லாமல் அறம் மாதிரியான நல்ல படங்கள் என்னால் நடிக்க முடிந்தது. வாய்ப்பு கொடுத்த மீடியா, சமூகவலைத்தளங்கள், விமர்சிப்பாளர்கள் ,சினிமா பிரபலங்கள், மற்றும் உங்கள் இதயத்தில் சின்னதாய் ஓர்இடம்  கொடுத்த அனைவருக்கும் நன்றி. எப்போதும் நேர்மையாகவே  சிந்தியுங்கள். இந்த  ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.