நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா கண்டனம் !

யன்தாரா குறித்து ராதாரவி தெரிவித்த கருத்துக்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள் முன்னணி நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் அய்யோ பாவம், ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும் பாடு இருக்கிறதே கடவுளே! நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள் உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப் கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள் இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.