நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் வெளிநாட்டில் நடத்த திட்டம் !

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசுகின்றனர். நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி இருக்கிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். திருமணத்தை வட இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா? என்று இருவரும் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. திருமண சடங்கு நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.