நரேந்திர மோடி படம் டிரெய்லர் வெளியானது

ரயில்வே ஸ்டேசனில் சிறுவயதில் டீ விற்ற மோடி, பின்னாளில் உலக தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் இயற்பெயர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி. 64 வயதாகும் மோடியின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தை  உருவாக்கி உள்ளார்கள். இதற்கு பிஎம் நரேந்திர மோடி என பெயர் வைத்துள்ளார்கள். இதில் குஜராத் கலவரம், ஆர்எஸ்எஸ் பயிற்சி, மோடிக்கு எதிரான பாகிஸ்தானின் சதி உள்பட பல விஷயங்களை காட்டி இருக்கிறார்கள். பிரதமர் மோடியாக விவேக் ஆனந்த் ஓப்ராய் நடித்துள்ளார். ஓமங் குமார் இயக்கி உள்ளார். லெஜண்ட் குளோபல் ஸ்டுடியோ மற்றும் ஆனந்த் பண்ட் மோசன் பிக்சர்ஸ் சார்பில் சுரேஷ் ஓப்ராய், சந்தீப் சிங், தயாரித்துள்ளனர். வரும் ஏப்ரல் 5ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் வெளியாகிறது.