நல்ல படங்களுக்கு நல்லவரவேற்பை ரசிகர்கள் தருவார்கள் என நம்புகிறேன் – “தொரட்டி” நாயகன் !

1980களில் வயல்வெளிகளில் ஆட்டுக்கிடை போடுபவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், தொரட்டி. ஷமன் மித்ரு தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ளார். மாரிமுத்து இயக்கியுள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது. இது குறித்து ஷமன் மித்ரு கூறியதாவது: படத்தை எடுத்து முடித்து ஒரு வருடம் ஆகிறது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினார்களே தவிர, யாரும் வெளியிட முன்வரவில்லை. சொந்தமாக வெளியிட எங்களுக்கு வசதி இல்லை. படத்தை வெளியிட கேட்டு தெருத்தெருவாக அலைந்தேன். கடைசியாக எஸ்.டி.சி நிறுவனம் வெளியிட முன்வந்துள்ளது. நல்ல படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள், தொரட்டி படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.