நளினகாந்தியின் படத்தில், கஸ்தூரி !

சராசரி கதைக்களம் என்ற படநிறுவனம் முதல் தமிழ் திரைப்படத்திலேயே முத்திரை பதிக்கும் நோக்கத்தில், அமெரிக்காவில் திரைப்படம் சார்ந்த படிப்பில் பயிற்சி பெற்றிருக்கும் பொன் சுகீர் டைரக்‌ஷனில், நளினகாந்தி'யை தயாரித்து இருக்கிறது. தேசிய விருது பெற்ற நடிகர் ஐ.எஸ் ஜெயபாலன், ஒரு மிக முக்கிய கனமான வேடத்தில் நடிக்க, அவருடன் இணைந்து கஸ்தூரி உள்பட பலரும் நடித்து இருக்கிறார்கள். இத்திரைப்படம், பிரபலமான ஒருவர் மனநோய்க்கு உள்ளாகும் போது, அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் ஆழமாக, நளினமாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் பொன் சுகீர்.