Cine Bits
நவம்பரில் நயனுக்கு நிச்சயதார்த்தம் !

நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் கொண்டு 4 வருடங்களாக ஜோடியாக சுற்றி வரும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. நயன்தாராவுக்கு 34 வயது நிரம்பி விட்டதால் அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது நயன்தாராவுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பட வாய்ப்புகள் குவிக்கின்றன. இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நவம்பர் மாதம் நிச்சயதார்த்ததை முடித்து அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.