Cine Bits
நவீனை அடுத்து வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவித்த சமுத்திரக்கனி
தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை கடுமையாக விமர்சித்து பேசினார். இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்து இன்று வரை வெற்றிகரமான இயக்குநராக வலம் வரும் ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குநர் என்று நக்கல் செய்தார் வடிவேலு. வடிவேலுவின் பேட்டியை பார்த்த இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!' என்று தெரிவித்துள்ளார்.