நாகசைதன்யா, சமந்தா நிச்சயதார்த்தம்

ஐதராபாத்:நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து வந்தார்கள். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையட்டி, “இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் வருகிற டிசம்பர் மாதம் நடக்கிறது.