நாகார்ஜூனாவுக்காக இரண்டு படங்களை தவிர்த்த​ அனுஷ்கா!

தமிழில் சிங்கம்-3 படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, தெலுங்கில் பாகுபலி-2, பாஹ்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதினால்தான் அஜித்தின்  57வது படத்தில் நடிக்க அவரால் கால்சீட் கொடுக்க முடியவில்லையாம்.அதேபோல், சிரஞ்சீவியின் 150 வது படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அனுஷ்கா பின்னர் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று வெளியேறி விட்டாராம். அதன்பிறகுதான் அனுஷ்கா மறுத்த அஜீத் படத்தில் கமிட்டான காஜலகர்வால், சிரஞ்சீவியின் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

ஆனால் இந்த படங்களில் அனுஷ்கா நடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் நாகார்ஜூனாவுடன் நடிக்கும் ஓம் நமோ வெங்கடேசாய படம்தானாம். தன்னை சினிமாவுக்கு  நாகார்ஜூனா என்பதால், அவர் தன்னுடன் அந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்தபோது அவரால் மறுக்க இயலவில்லையாம். அதன்காரணமாகத்தான் அஜித் மற்றும் சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதை தவிர்த்தாராம் அனுஷ்கா.