நாகேஷுக்குப் பிறகு நான் அதிகமா ரசிக்கிறது, வடிவேலுவைத்தான்- நடிகர் பார்த்திபன்!

ஆறு மாதத்துக்கு முன்னாடி அமெரிக்கத் தயாரிப்பாளர் ஒருவர் எனக்கும், வடிவேலுக்கும் ஒரு படத்துல நடிக்கிறதுக்காக அட்வான்ஸ் கொடுத்துட்டார். ஆனா, தயாரிப்பாளர் சங்கத்துல இயக்குநர் ஷங்கர் படத்துக்கான ஒரு பிரச்னை போய்க்கிட்டு இருக்கிறதால, எங்க படம் கொஞ்சம் லேட் ஆகும். அந்தப் பிரச்னை முடிஞ்சதும் உடனே இந்தப் படத்தை ஆரம்பிச்சிடுவோம். வடிவேலுகூட நடிக்கிற வரைக்கும் அவரோட படங்களை நான் பார்த்தது கிடையாது. அதனால, நான் எழுதிய காமெடியெல்லாம் வேற ஸ்டைல்ல இருந்துச்சு. வடிவேலு அபார திறமையுள்ள மனிதர். நாகேஷுக்குப் பிறகு நான் அதிகமா ரசிக்கிறது, வடிவேலுவைத்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரோட காமெடிகளைப் பார்த்து ரசிப்பேன். சீக்கிரமே எங்க காம்போவைப் பார்க்கலாம்.