நாக சவுர்யாவுக்கு பதில் கொடுத்த சாய்பல்லவி….

நடிகை சாய்பல்லவி முதன் முறையாக தமிழ் படத்தில்  ஏ.எல்.விஜய் இயக்கத்தில் “கரு” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார். இந்த நாயகன் ஒரு பேட்டியில்,அந்த நடிகை  செட்டில் பந்தா  காட்டியதாகவும், சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் கூறி  பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில்   இந்த நாயகனை பற்றி உயர்வாக பேசினார் அந்த நடிகை .அவரிடம் நாக சவுர்யா உங்களைப்பற்றி இப்படி பேசியுள்ளாரே,இதற்கு என்ன பதில் என சாய்பல்லவியிடம் கேட்டதற்கு,அவர் இப்படி சொன்னது ஏன் என்று தெரியவில்லை, அப்படி சொன்னது அதிர்ச்சி தருகிறது என்றும், அந்த நாயகன் மிக திறமையான நடிகர், இனி அவர் என்னைப்பற்றி புரிந்து கொள்வர் என நம்புகிறேன்: என்றும் பதில் அளித்துள்ளார்.