நாசர் தலைமையில் நாளை நடிகர் சங்க செயற்குழு கூட்டம் !

நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு நாசர், விஷால் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர். எனவே ஜூன் மாதம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், ஓட்டுப்பதிவு ஆகிய தேதிகளையும் தேர்தலை எந்த இடத்தில் நடத்துவது என்பதையும் செயற்குழுவில் முடிவு செய்து அறிவிக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் தற்போதைய நிர்வாகிகள் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.