நாச்சியார் படம் 300 திரையரங்கில் திரையிட உள்ளது…

இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி “நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், வீரா, மனுசனா நீ ” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் நாச்சியார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய படமாக இருப்பதால் 300 திரையரங்குகளில் திரையிட உள்ளது. கடந்த ஆறு வாரங்களில் வெளிவந்த 20 படங்களில் ஒரு படம் கூட பெரிய அளவில் லாபத்தை தரவில்லை என்றும், 2017ம் வருடத்திய நிலைமை இந்த வருடமும் வந்துவிடுமோ என்று தியேட்டர்காரர்கள் அச்சத்தில் இருந்தாலும் இந்த ஆண்டு பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வருவதால் தியேட்டர் வசூல் நன்றாக இருக்கும் என்று நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் தேர்வு  ஆரம்பமாக இருப்பதால் ஒரு மாதத்திற்கு  பெரிய படங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்று  தெரிகிறது.