நாடக நடிகர்கள் ஓட்டுக்கு காசுவாங்குபவர்கள் பாக்யராஜ் மீது கருணாஸ் ஆவேசம்!

நடிகர் சங்க தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பாக்யராஜ் சமீபத்தில் நாடக நடிகர்களிடையே சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியபோது, ஓட்டு கேட்க வரும்போது ஏழ்மையில் இருக்கும் நாடக நடிகர்களுக்கு ஓரளவு பண உதவி செய்வோம் என்றும் அதன் பின்னர் வெற்றி பெற்று பதவியேற்றவுடன் நாடக நடிகர்களுக்கு பல உதவிகள் செய்வோம் என்று பேசியுள்ளார். பாக்கியராஜ் இதுவரை இதற்கு மறுப்பு தெரிவிக்காததால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.  பாக்கியராஜ் மதிப்பிற்குரிய இயக்குநர் மற்றும் மிகப்பெரும் நடிகராக இருந்து கொண்டு இவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் இதற்காக கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.