“நாடக மேடை”: கார்த்திக் நரேன் தயாரிப்பு….

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இதனை தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமி, ஷ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியவர்களை வைத்து இயக்கி உள்ளார். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அவர் இந்த படம்  வெளியாகுவதற்கு  முன்பே அடுத்த படமான “நாடக மேடை” என்ற படத்தை  நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட்  பட நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்கிறார்.இதில் ஒளிப்பதிவாளராக சுஜித் சரங், இசையமைப்பாளராக ரோன் ஈத்தன் யோகன், ஸ்ரீஜித் சரங் எடிட்டராகவும் இருக்கின்றனர்.இந்த படத்தில் யாரும் யூகிக்க முடியாத நட்சத்திர கூட்டணியுடன் களமிறங்க உள்ளாராம். இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.