Cine Bits
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் திட்டவட்டம்!
ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்த பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக அவர் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்ஷய்குமாரும் சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலுக்கு அக்ஷய்குமார் விளக்கம் அளித்துள்ளார், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக தகவல் பரவி உள்ளது. அரசியலில் ஈடுபடுவது எனது நோக்கம் இல்லை. நான் இப்போது சினிமாவில் என்ன செய்துகொண்டு இருக்கிறேனோ அதையெல்லாம் அரசியலில் என்னால் செய்ய முடியாது” என்றார். இதன்மூலம் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்பதை அக்ஷய்குமார் தெளிவுபடுத்தி உள்ளார்.