நானும் ஏன் இரு மகன்களும் நண்பர்கள் மாதிரி – தனுஷ் !

தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' வரும் 21ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக மும்பையில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷுடன் அவரின் மனைவி ஐஸ்வர்யா கலந்து கொண்டார். அப்பொழுது தன் குடும்பம் பற்றி பேசினார் என் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் எனக்கு நண்பர்கள் போன்றவர்கள். பல நாட்கள் கழித்து என்னை பார்க்கம்போது அவர்கள் குஷியாகிவிடுவார்கள். அவர்களுடன் இருக்கும் நேரத்தில் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன், அவர்களுடன் விளையாடுவேன். நான் ஊரில் இருந்தால் என்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். எனக்கு மாமா ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை. அது தொடர்பாக அவர் ஏற்கனவே எடுத்த முயற்சிகள் கை கொடுக்கவில்லை. இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும், எனது ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்றார் தனுஷ்.