நானொன்றும் என் குடும்பத்தாரால் ஏமாற்றப்படவில்லை – நடிகை ஜெயசுதா!

அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்பட பல தமிழ் படங்களிலும் இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் ஜெயசுதா. கடந்த ஆண்டு வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவரின் சொத்துக்களை குடும்பத்தினரும் உறவினர்களும் அனுபவித்ததாகவும், அதனால் அவர் வருத்தப்பட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஜெயசுதா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு 2 அண்ணன்கள், ஒரு தங்கை. நான் நடிக்க தொடங்கிய பிறகு என் குடும்பத்தினரின் தேவைகளை நான் பார்த்துக்கொண்டேன். பிறகு கல்யாணமாகி, எல்லோருக்கும் தனித்தனி குடும்பங்கள் உண்டானது. 1980, 1990களில் தெலுங்கில் முன்னணி நடிகையாக நிறைய சம்பாதித்தேன். அப்போது எனக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை எல்லாம் அதிகமாக இல்லை. அப்போது
புத்திசாலித்தனமா யோசித்து இருந்தால், சம்பாதித்த பணத்தை எதிர்காலத் தேவைக்கு உதவும் வகையில் சேமித்து இருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஆனாலும் ஓரளவுக்குச் சொத்துகளை வாங்கினோம். நல்ல நிலையில்தான் இருந்தோம். எங்களுக்கு கஷ்டமான நிலை ஏற்பட்ட போதும், இப்போதும் என் உடன்பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க. சொத்துகளை இழந்ததெல்லாம், சினிமா தயாரிப்பு பணிகளால்தான். இந்நிலையில் என் கணவர் இறந்துட்டார். பின்னர் என் பசங்களுக்கு அடுத்து, என் குடும்பத்தினர்தான் எனக்குப் பக்கபலமா இருக்காங்க. அவங்க யாரும் என் சொத்துக்களை அபகரிக்கவில்லை உண்மைநிலை இதுதான். யாரும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் இவ்வாறு ஜெயசுதா கூறினார்.