நான்கு கதாநாயகிகளுடன் களமிறங்கும் விஜய் தேவர்கொண்டா !

தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டியர் காம்ரேட்' படத்துக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஐஷ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, பிரேஸில் மாடலான இஸபெல் ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் களமிறங்கியிருக்கிறார். தமிழில் பல்வேறு படங்களில் நடித்துவந்த ஐஷ்வர்யா ராஜேஷ் 'கனா'வின் தெலுங்கு ரீமேக்கான கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி படத்தின் மூலம் டோலிவுட்டுக்கு அறிமுகமானார். இதையடுத்து, இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடிக்கும் படத்துக்கு`வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ரொமான்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று தொடங்கியது. கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது, படக்குழு.