நான் அரசியலிலிருந்து விலகிவிட்டேன் – நடிகர் நெப்போலியன் !

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்துள்ளது. நடிகர் சங்கத்தில் தலைவராக விஜயகாந்தும், செயலாளராக சரத் குமாரும், துணைத்தலைவராக நானும் இருந்தபோது நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருந்தது. சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரையும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி இருக்கக்கூடாது. நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன். இப்போது எந்த கட்சியிலும் இல்லை. ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் நடிகை ஷீனாவும் நடித்துள்ளார். இந்த படத்தை பெல் கணேசன் தயாரித்து இருக்கிறார். குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. ஹாலிவுட் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இந்த படம் ஒரு மணி 35 நிமிடங்கள் ஓடும். இவ்வாறு நெப்போலியன் கூறினார்.