நான் ஈ பட ஹீரோ மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார்!

பிரபல இயக்குனர் கொரட்டல சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம் அடுத்து நானி மீதும் பாலியல் புகாரை அளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. சினிமா வாய்ப்புக்காக போராடிய போது  அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி என்னுடன் பாலியல் தொடர்பும் வைத்துக்கொண்டார். சொன்னபடி எனக்கு பட வாய்ப்புகள் பெற்று தருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். நானிக்கு எதிராக வழக்கு தொடர நான் விரும்பவில்லை. எனது நோக்கமே படவாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்துக்கு எதிராக போராடுவதுதான். ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டை நானியின் மனைவி அஞ்சனா மறுத்ததுடன் அவருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.