நான் எப்போது கீழே போகிறேனோ, என்னை தூக்கி விடுவார் விஜய்- நடிகர் ஸ்ரீமான் உருக்கம்

தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் நிறைய நண்பர்கள் உள்ளனர். இதில் குறிப்பாக ஒரு சில நடிகர்களிடம் மட்டும் விஜய் மிகவும் நெருங்கிய நண்பராக இருப்பார். அப்படி விஜய்யின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஸ்ரீமன், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் ‘விஜய்யை நான் எப்போதும் விஜிமா என்று கூப்பிடுவேன், அவரும் என்னை ஸ்ரீமா என்று கூப்பிடுவார். நான் எப்போதெல்லாம் கொஞ்சம் கீழே போகிறேனோ, என்னை தூக்கி விடுவார் விஜய், நல்ல மனிதர் அவர்’ என்று கூறியுள்ளார்.